/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பிரேக் பிடிக்காததால் விபத்தில் சிக்கிய அரசு பஸ்;பயணிகளை காப்பாற்றிய ஓட்டுனர்
/
பிரேக் பிடிக்காததால் விபத்தில் சிக்கிய அரசு பஸ்;பயணிகளை காப்பாற்றிய ஓட்டுனர்
பிரேக் பிடிக்காததால் விபத்தில் சிக்கிய அரசு பஸ்;பயணிகளை காப்பாற்றிய ஓட்டுனர்
பிரேக் பிடிக்காததால் விபத்தில் சிக்கிய அரசு பஸ்;பயணிகளை காப்பாற்றிய ஓட்டுனர்
ADDED : ஜூன் 15, 2024 07:40 AM
தொப்பூர் : தொப்பூர் கணவாய் பகுதியில், பிரேக் பிடிக்காததால் அரசு டவுன் பஸ் விபத்தில் சிக்கியது. ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டு, பயணிகள் உயிர் தப்பினர்.
சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், தர்மபுரி மாவட்டம், தொப்பூர் கணவாய் பகுதியில் சாலை சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. இதற்காக, தொப்பூர் வனப்பகுதியில் அமைந்துள்ள இருவழி பாதை ஒரு வழி பாதையாக மாற்றி வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் நேற்று காலை, 8:00 மணிக்கு தர்மபுரி பஸ் ஸ்டாண்டில் இருந்து தொப்பையார் அணை செல்லும் வழித்தடம் எண். 5பி டவுன் பஸ்சை ஓட்டுனர் லோகநாதன், 50, ஓட்டி சென்றார்.
வெள்ளக்கல் அடுத்த பூவல் மடுவு மற்றும் அருகில் உள்ள பகுதியில் இருந்து, தொப்பூர் அரசு பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், 15 பேர், பொதுமக்கள் என, 25 பேருடன் தொப்பூர் கட்டமேடு பகுதியை கடந்து, ஆஞ்ச நேயர் கோவில் அருகே சென்ற போது, பஸ் பிரேக் பழுதால் கட்டுப்பாட்டை இழந்தது. ஓட்டுனர் சாதுர்யமாக எதிரில் வரும் வாகனங்கள் மீது மோதாமல் இருக்க, பஸ்சை வலது பக்கம் உள்ள வனப்பகுதிக்கு திருப்பினார். அப்போது, சேலத்தில் இருந்து ஓசூர் நோக்கி சென்ற ஈச்சர் லாரி மீது, பஸ் மோதியபின் அருகில் இருந்த மரத்தில் மோதி நின்றது. இதில், பஸ் முன் பகுதி
சேதமடைந்தது.
லாரி ஓட்டுனர்கள் சேலம் மாவட்டம் அரியானுாரை சேர்ந்த கிருஷ்ணன், 27, கொல்லப்பட்டியை சேர்ந்த அருண், 23, ஆகிய இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர்களை மீட்டு, தர்மபுரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பஸ்சில் பயணம் செய்தவர்கள் காயமின்றி அதிர்ஷ்டவசமாக தப்பினர். விபத்து குறித்து, தொப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர். இதன் காரணமாக, தேசிய நெடுஞ்சாலையில், 2 மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.