/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஒகேனக்கல்லில் நீர்வரத்து 3,000 கன அடியாக அதிகரிப்பு
/
ஒகேனக்கல்லில் நீர்வரத்து 3,000 கன அடியாக அதிகரிப்பு
ஒகேனக்கல்லில் நீர்வரத்து 3,000 கன அடியாக அதிகரிப்பு
ஒகேனக்கல்லில் நீர்வரத்து 3,000 கன அடியாக அதிகரிப்பு
ADDED : மே 17, 2024 08:36 PM
ஒகேனக்கல்:நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால், ஒகேனக்கல்லில் நீர்வரத்து வினாடிக்கு, 3,000 கன அடியாக அதிகரித்துள்ளது.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை இன்றி வறட்சி நிலவுவதால், ஒகேனக்கல் காவிரியாற்றில் கடந்த இரண்டு மாதங்களாக நீர்வரத்து வினாடிக்கு, 200 கன அடியாக சரிந்தது. இதனால், அங்குள்ள ஐவர்பாணி, அதன் கிளை ஆறுகள், ஐந்தருவி உள்ளிட்டவை முற்றிலுமாக நீரின்றி, வறண்டு காணப்பட்டன. ஒகேனக்கல் காவிரியாறு ஆங்காங்கே குட்டைப்போல் காட்சி அளித்தது.
இந்நிலையில். கடந்த சில நாட்களாக ஒகேனக்கல் நீர்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, நாட்றாம்பாமையம், தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் பெய்த மழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் காலை, 10:00 மணிக்கு வினாடிக்கு, 1,000 கன அடியாக வந்து கொண்டிருந்த நீர்வரத்து நேற்று மாலை, 5:00 மணிக்கு வினாடிக்கு, 3,000 கன அடியாக அதிகரித்து தண்ணீர் வந்தது. இதனால் வறண்டு கிடந்த அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. சுற்றுலா பயணிகள் அருவியில் குளித்தும், பரிசல் பயணம் செய்தும் மகிழ்ந்தனர்.

