sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 23, 2026 ,மாசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

தொழிலாளர் தினம் கொண்டாட்டம்

/

தொழிலாளர் தினம் கொண்டாட்டம்

தொழிலாளர் தினம் கொண்டாட்டம்

தொழிலாளர் தினம் கொண்டாட்டம்


ADDED : மே 02, 2024 07:41 AM

Google News

ADDED : மே 02, 2024 07:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலக்கோடு :தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு தாசில்தார் அலுவலகம் முன், சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, தமிழ் மாநில கட்டட தொழிலாளர் சங்கம் சார்பில், மே தின கொண்டாட்டம், சங்க ஆலோசகர்கள் கோவிந்தசாமி, சிவராஜ் தலைமையில் நடந்தது. தொடர்ந்து, சங்க கொடியேற்றி, பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர். இதில், பாலக்கோடு சங்க தலைவர் கணேசன், செயலாளர் இடும்பன், பொருளாளர் சண்முகம், செயற்குழு உறுப்பினர்கள், நிர்வாகிகள், தொழிலாளர்கள் என, 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

அதேபோல், தாசில்தார் அலுவலகம் முன், தச்சு தொழிலாளர்கள் சார்பில், தொழிலாளர் தினம் கொண்டாடபட்டது. இதில், சங்க தலைவர் ராஜா தலைமை தாங்கினார்.

அதேபோல், இரு சக்கர வாகன பழுதுபார்போர் சங்கம் சார்பில், நடந்த மே தின கொண்டாட்டத்தில், மாநில துணை பொதுச்செயலாளர் வடிவேல் தலைமை வகித்தார்.

* கடத்துார் பஸ் ஸ்டாண்டில் ஆட்டோ தொழிற்சங்கம் சார்பில் ஆட்டோ சங்க தலைவர் அப்பு தலைமையில் மே தின விழா கொண்டாடப்பட்டது. பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் மணி, துணைத்தலைவர் வினோத், வக்கீல் முனிராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

* தடங்கத்தில் உள்ள தனியார் ஸ்பின்னிங் மில் எதிரே, திராவிட பஞ்சாலை தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில், மே தின கொண்டாட்டம் நடந்தது. கிளை செயலாளர் மாரியப்பன் தலைமை வகித்தார். பெரியண்ணன், மாதையன் முன்னிலை வகித்தனர். தர்மபுரி, தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் சுப்ரமணி சங்க கொடியை ஏற்றி வைத்து தொழிலாளர்களிடையே பேசினார். இதில், தி.மு.க., ஒன்றிய செயலாளர் சண்முகம், தொழிற்சங்க நிர்வாகிகள், சங்க உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

அதேபோல், சி.ஐ.டி.யூ., தர்மபுரி டிஸ்ட்ரிக்ட் டெக்டைல்ஸ் மில் ஒர்க்கர்ஸ் யூனியன் தொழிற்சங்கம் சார்பில், மே தின விழா நடந்தது.






      Dinamalar
      Follow us