ADDED : ஆக 15, 2024 01:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி, தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்கீடு செய்யாத, மத்திய அரசை கண்டித்து, ம.தி.மு.க., சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலகம் அருகே, நேற்று நடந்தது.
மாவட்ட செயலாளர் ராமதாஸ் தலைமை வகித்தார். மாநில இளைஞரணி செயலாளர் ஆசைத்தம்பி பேசினார். இதில், தமிழகத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யாத மத்திய அரசை கண்டித்தும், மேகத்தாட்டு அணை கட்டுவதை மத்திய அரசு தடுக்கவும், தமிழகத்திற்கு நீட் தேர்வில் விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.