ADDED : ஆக 24, 2024 01:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விபத்தில் பெயின்டர் பலி
அதியமான்கோட்டை, ஆக. 24-
நல்லம்பள்ளி அருகே, ஏலகிரியான்கொட்டாய் பகுதியை சேர்ந்த பெயின்டர் வசந்த், 25, இவருக்கு திருமணமாகி மனைவி, ஒரு பெண் குழந்தை உள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சேலம்--தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில் அதியமான்கோட்டை அருகே உள்ள, புறவடை சந்திப்பு சாலை வழியாக, அவருடைய ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரில் சென்றபோது, முன்னாள் சென்ற லாரியின் பின்பகுதியில் மோதி பலத்த காயமடைந்தார். போலீசார் மற்றும் அக்கம் பக்கத்தினர் வசந்தை மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார். அதியமான்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.