/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பல நாட்களாக வீணாகும் குடிநீர் நடவடிக்கைக்கு மக்கள் கோரிக்கை
/
பல நாட்களாக வீணாகும் குடிநீர் நடவடிக்கைக்கு மக்கள் கோரிக்கை
பல நாட்களாக வீணாகும் குடிநீர் நடவடிக்கைக்கு மக்கள் கோரிக்கை
பல நாட்களாக வீணாகும் குடிநீர் நடவடிக்கைக்கு மக்கள் கோரிக்கை
ADDED : மார் 30, 2024 03:29 AM
தர்மபுரி: தர்மபுரி அருகே, பல நாட்களாக வீணாகி வரும் ஒகேனக்கல் குடிநீரால், பொதுமக்கள் கவலையில் உள்ளனர்.
தர்மபுரி மாவட்டம், நாயக்கன்கொட்டாய் பகுதியில் ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் குழாய் உள்ளது. முட்புதருக்கு இடையில் உள்ள இதில், நாள்தோறும் ஏராளமான லிட்டர் தண்ணீர் வெளியேறி வீணாகி வருகிறது. ஒரு சிலர், அவர்களின் பல்வேறு தேவைகளுக்காக குடத்தில் தண்ணீர் பிடித்து செல்கின்றனர். ஆனால், மற்ற நேரங்களில் நாள் முழுவதும் தொடர்ந்து குடிநீர் வெளியேறி அருகில் உள்ள கால்வாயில் செல்கிறது.
இந்த கால்வாய் முழுவதும் முட்புதராக உள்ளதால், ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் கூட இதை குடிக்க முடியாத நிலை உள்ளது. தற்போது கோடையில் பல கிராமங்களுக்கு, முறையான குடிநீர் வழங்க முடியாத நிலையில், இவ்வாறு பல மாதங்களாக இந்த குடிநீர் வெளியேறி வருவதால், இதை காணும் பொதுமக்கள் கவலையடைந்து வருகின்றனர். எனவே, குடிநீர் வீணாவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.