ADDED : செப் 04, 2024 10:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாப்பிரெட்டிப்பட்டி: கடத்துார் அரசு ஆண்கள் மற்றும் மகளிர் மேல்நி-லைப்பள்ளியில், விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கடத்துார் டவுன் பஞ்., தலைவர் மணி தலைமை வகித்தார்.
தலைமையாசிரியர்கள் மணி, அழகம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், 81 மாணவர்கள், 137 மாணவியர் என, 218 பேருக்கு சைக்கிள்களை தர்மபுரி, தி.மு.க., - எம்.பி., மணி, மேற்கு மாவட்ட செயலாளர் பழனியப்பன் ஆகியோர் வழங்கினர். அதேபோல் புட்டிரெட்டிப்-பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில், 37 மாணவ, மாணவியருக்கு சைக்கிள் வழங்கப்பட்டது.