/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அரூரில் வட்டார போக்குவரத்து அலுவலகம் அமைக்க கோரிக்கை
/
அரூரில் வட்டார போக்குவரத்து அலுவலகம் அமைக்க கோரிக்கை
அரூரில் வட்டார போக்குவரத்து அலுவலகம் அமைக்க கோரிக்கை
அரூரில் வட்டார போக்குவரத்து அலுவலகம் அமைக்க கோரிக்கை
ADDED : பிப் 24, 2025 03:15 AM
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூரில், கடந்த, 1998ல் மோட்டார் வாகன பகுதி அலுவலகம் துவங்கப்பட்டது. ஒரு மோட்டார் வாகன ஆய்-வாளர் உள்பட, 5 பேர் பணிபுரிகின்றனர்.
அரூர் மோட்டார் வாகன ஆய்வாளர் பகுதி அலுவலகத்தின் கீழ், அரூர், பாப்பிரெட்-டிப்பட்டி ஆகிய இரு தாலுகாவிற்கு உட்பட்ட வாகனங்கள் பதிவு செய்யப்படுகின்றன. கடந்தாண்டு, பெர்மிட் வாகனங்கள் மற்றும் சொந்த உபயோகத்திற்கு பயன்படும் டூவீலர், கார்கள் என, 9,149 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல், புதி-தாக ஓட்டுனர் உரிமம், 4,199 பேருக்கு வழங்கியது மற்றும் புதுப்-பித்தல் என கடந்தாண்டு, 10,316 ஓட்டுனர் உரிமம் வழங்கப்பட்-டுள்ளது. மேலும், கடந்தாண்டு பல்வேறு வரியினங்கள் மூலம், அரூர் மோட்டார் வாகன பகுதி அலுவலகம் சார்பில், 35.17 கோடி ரூபாய் வரி வசூலிக்கப்பட்டு அரசுக்கு செலுத்தப்பட்டுள்-ளது. ஆண்டுதோறும் வாகனங்களின் எண்ணிக்கை மற்றும் ஓட்டுனர் உரிமம் பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் மூலம் அரசுக்கு வருவாயும் அதிகரித்து வருகின்றன. இந்நி-லையில், பேட்ஜ், பெர்மிட், டூப்ளிகேட் ஓட்டுனர் உரிமம் மற்றும் காலாவதியான ஓட்டுனர் உரிமம் புதுப்பித்தல் உள்ளிட்டவற்றிற்கு அனுமதி பெறுவதற்கு, அரூரில் இருந்து, 40 கி.மீ., துாரத்தில் உள்ள தர்மபுரி ஆர்.டி.ஓ., அலுவலகத்திற்கு செல்ல வேண்டியுள்-ளது. இதனால், நேரம் மற்றும் பணம் விரையமாகிறது. இதை கருத்தில் கொண்டு அரூர் மோட்டார் வாகன பகுதி அலுவல-கத்தை, வட்டார போக்குவரத்து அலுவலர் அலுவலகமாக தரம் உயர்த்த, வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

