/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஆவணமின்றி எடுத்து சென்ற ரூ.72 ஆயிரம் பறிமுதல்
/
ஆவணமின்றி எடுத்து சென்ற ரூ.72 ஆயிரம் பறிமுதல்
ADDED : மார் 24, 2024 01:32 AM
பாப்பிரெட்டிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பொம்மிடி ஆர்.எம்., நகர் ரோட்டிலுள்ள சோதனைச்சாவடியில், தேர்தல் நிலை கண்காணிப்பு குழு அலுவலர் மகேஸ்வரி தலைமையில், போலீசார் நேற்று வாகன சோதனை நடத்தினர். அப்போது மணிபுரத்தில் இருந்து பொம்மிடிக்கு வந்த லாரியில், மணிபுரத்தை சேர்ந்த டிரைவர்
சக்திவேல் எவ்வித ஆவணமின்றி எடுத்து வந்த 72,500 ரூபாயை பறிமுதல் செய்தனர். இதை உதவி தேர்தல் அலுவலர் செர்லினா ஏஞ்சலா, தாசில்தார்கள் சரவணன், தனி தாசில்தார் பெருமாள், தேர்தல் துணை தாசில்தார் சிவஞானம், ஆர்.ஐ., கார்த்திக் ஆகியோரிடம்
ஒப்படைத்தனர். பின், அப்பணம் பாப்பிரெட்டிப்பட்டி சார் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

