/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஸ்ரீ விஜய் வித்யாலயா மெட்ரிக் பள்ளி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை
/
ஸ்ரீ விஜய் வித்யாலயா மெட்ரிக் பள்ளி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை
ஸ்ரீ விஜய் வித்யாலயா மெட்ரிக் பள்ளி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை
ஸ்ரீ விஜய் வித்யாலயா மெட்ரிக் பள்ளி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை
ADDED : மே 13, 2024 07:38 AM
தர்மபுரி,: தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரியிலுள்ள ஸ்ரீ விஜய் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மாணவ மாணவியர், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று, மாவட்ட அளவில் சிறப்பிடம் பிடித்து, சாதனை படைத்துள்ளனர். கிருஷ்ணகிரி நகரில், ராயக்கோட்டை ரோட்டிலுள்ள பள்ளி மாணவி ஸ்ரீ சுகவர்ஷினி, மாணவர் பவன்குமார், 497 மதிப்பெண் பெற்று பள்ளியளவில் முதலிடமும், ஜோஷினி, 496 மதிப்பெண்கள் பெற்று, 2-ம் இடமும், மேகப்பிரியா, கவியரசி, 494 மதிப்பெண் பெற்று, 3-ம் இடமும் பெற்றுள்ளனர்.
கிருஷ்ணகிரி பழையபேட்டை பள்ளி மாணவி சர்வேஸ்வரி, 497 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடமும், மாருதி யஸ்வந்த், 495 மதிப்பெண்கள் பெற்று, 2-ம் இடமும், ரம்யா, 493 மதிப்பெண்கள் பெற்று, 3-ம் இடமும் பிடித்துள்ளனர்.
தர்மபுரி பள்ளியை சேர்ந்த மாணவி சவுந்தர்யா, 497 மதிப்பெண் பெற்று பள்ளியளவில் முதலிடமும், மிதுனா, 496 மதிப்பெண் பெற்று, 2-ம் இடமும், மாணவர் யுவன் சங்கர், 495 மதிப்பெண் பெற்று, 3-ம் இடமும் பெற்றுள்ளனர்.
சாதனை படைத்த மாணவ, மாணவியரை ஸ்ரீ விஜய் வித்யாலயா கல்வி நிறுவனங்களின் தலைவர் இளங்கோவன், தாளாளர் மீனா இளங்கோவன், இயக்குனர்கள் பிரேம் இளங்கோவன், சினேகா பிரவின், பள்ளி தலைமை செயற்பாட்டு அலுவலர் சந்திரபானு, பள்ளி முதன்மை முதல்வர் பிரெடரிக் சாம் , முதல்வர்கள் பத்மா, சிவகாம சுந்தரி, ஜெயசீலன் மற்றும் ஆசிரியர்கள் பொறுப்பாசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.