/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தர்மபுரியில் கோடை கால நீச்சல் பயிற்சி முகாம்
/
தர்மபுரியில் கோடை கால நீச்சல் பயிற்சி முகாம்
ADDED : ஏப் 04, 2024 04:41 AM
தர்மபுரி: தர்மபுரி ராஜாஜி நீச்சல் குளத்தில், கோடை கால நீச்சல் பழகுதல் பயிற்சி முகாம் நடக்க உள்ளது என, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சாந்தி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய, தர்மபுரி பிரிவு சார்பில் பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ, மாணவியருக்கு நீச்சல் பழகுதல் பயிற்சி முகாம் நடக்க உள்ளது. அதன்படி, முதல் கட்ட பயிற்சி முகாம் நாளை முதல் வரும், 12 வரையிலும், 2ம் கட்ட பயிற்சி முகாம், 13 முதல், 24 வரையிலும் நடக்க உள்ளது. மேலும், 3ம் கட்ட பயிற்சி, 25 முதல் மே மாதம், 7 வரையிலும், 4ம் கட்ட பயிற்சி மே, 8 முதல், 20 வரையிலும், 5ம் கட்ட பயிற்சி மே, 21 முதல், ஜூன், 1 வரையிலும் நடக்க உள்ளது. இப்பயிற்சிகள் காலை, 7:00 மணி முதல், 8:00 மணி, 8:00 மணி முதல், 9:00 மணி வரையிலும் மாலையில், 4:30 மணி முதல், 5:30 மணி வரையிலும் நடக்க உள்ளது.
இந்த நீச்சல் பயிற்சிக்கு கட்டணமாக, 1,770 ரூபாய் செலுத்த வேண்டும். இதற்கான விண்ணப்பங்களை, தர்மபுரி அடுத்த செந்தில்நகரிலுள்ள ராஜாஜி நீச்சல்குள அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். எனவே, தர்மபுரி மாவட்டத்திலுள்ள பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ, மாணவியர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி நீச்சல் பழகலாம்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

