/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
உச்சம் தொடும் வெயில் 102.2 பாரன்ஹீட்டாக பதிவு
/
உச்சம் தொடும் வெயில் 102.2 பாரன்ஹீட்டாக பதிவு
ADDED : மார் 30, 2024 03:29 AM
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் பிப்., இறுதியில் இருந்து வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. மார்ச் தொடக்கத்தில் இருந்து, வெயிலின் அளவு, 90 பாரன்ஹீட்டுக்கு மேல் அதிகரித்து காணப்பட்டது. இதனால், ஏரி, குளங்களில் இருந்த தண்ணீர் வெகுவாக குறைந்து வறண்டு விட்டது. வன பகுதிகளில் உள்ள மரங்கள் மட்டுமின்றி, விவசாய நிலங்களிலும் தண்ணீர் இல்லாததால் தென்னை, மா உள்ளிட்ட மரங்களும் காய்ந்து வர தொடங்கியுள்ளது.
இந்நிலையில், மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெயில் உச்சத்தை தொட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன், மாவட்டத்தில் வெயில் அளவு, 100.4 பாரன்ஹீட் பதிவானது. நேற்று முன்தினம், 100.4 பாரன்ஹீட் பதிவான நிலையில், நேற்று முன்தினம் வெயிலின் தாக்கம் மேலும் அதிகரித்து, 101.6 பாரன்ஹீட்டாக உயர்ந்தது. இதற்கிடையில் நேற்று, 102.2 பாரன்ஹீட்டாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது.

