/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மாந்திரீகம் செய்வதாக நகை பறிப்பு வாலிபருக்கு போலீசார் வலைவீச்சு
/
மாந்திரீகம் செய்வதாக நகை பறிப்பு வாலிபருக்கு போலீசார் வலைவீச்சு
மாந்திரீகம் செய்வதாக நகை பறிப்பு வாலிபருக்கு போலீசார் வலைவீச்சு
மாந்திரீகம் செய்வதாக நகை பறிப்பு வாலிபருக்கு போலீசார் வலைவீச்சு
ADDED : மே 28, 2024 08:51 AM
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த நரிப்பள்ளி அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் எழுமலை மனைவி ராஜேஸ்வரி, 26; கடந்த மார்ச், 19ல் காலை, 9:00 மணிக்கு ராஜேஸ்வரி வீட்டிலிருந்த போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், உங்கள் வீட்டில் குடும்ப பிரச்னை உள்ளது எனக் கூறியுள்ளார்.
அதை தீர்த்து வைக்க என்ன வழி என ராஜேஸ்வரி கேட்டபோது, கழுத்து மற்றும் காது, கால்களில் உள்ள நகைகளை கழற்றி கொடுத்தால், மாந்திரீகம் செய்து கொடுப்பதாக அந்த நபர் கூறியுள்ளார். மேலும், தான் காவேரிப்பட்டணத்தை சேர்ந்தவன் எனவும், தன் பெயர் கோபி, 29, எனக்கூறி அவரது மொபைல்போன் எண்ணை கொடுத்துள்ளார். இதையடுத்து, ராஜேஸ்வரி தான் அணிந்திருந்த தோடு, கொலுசு, ஒரு பவுன் செயின் ஆகியவற்றை கழற்றி கொடுத்துள்ளார்.
அதை வாங்கிக் கொண்ட மர்ம நபர், ஒரு வாரத்தில் வருவதாக கூறிச்சென்றுள்ளார். தொடர்ந்து, ஒரு வாரம் கழித்து, ராஜேஸ்வரி மர்ம நபருக்கு போன் செய்தபோது இன்னும் மாந்தீரிகம் செய்யவில்லை எனக் கூறியுள்ளார். மீண்டும் ஒரு வாரத்திற்கு பின் போன் செய்தபோது, மர்ம நபரின் மொபைல்போன், 'சுவிட்ச் ஆப்' என வந்துள்ளது. ராஜேஸ்வரி புகார் படி, கோட்டப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.