UPDATED : அக் 23, 2026 06:55 AM
ADDED : அக் 23, 2026 05:44 AM

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் முழுவதும், நேற்று முன்தினம் இரவு முதல், நேற்று காலை வரை பரவலாக மிதமான மழை பெய்தது.
தென்மேற்கு வங்கக்கடலில் நேற்று முன்தினம், புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது.
இதனால், தமிழகத்தில், 21 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. தர்மபுரி மாவட்டத்தில், கடந்த சில தினங்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமானது முதல் கனமழை பெய்து வந்தது. இந்நிலையில், நேற்று நள்ளிரவு முதல், நேற்று காலை வரை தர்மபுரி, நல்லம்பள்ளி, பென்னாகரம், பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மிதமான மழை பெய்தது.
இதில் நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி மாவட்டத்தில், அதிகபட்சமாக அரூரில், 34 மி.மீ., மழையளவு பதிவானது. அதை தொடர்ந்து, பாப்பிரெட்டிப்பட்டி, 34, பாலக்கோடு, 18.20, தர்மபுரி, 18, பென்னாகரம், 6, மொரப்பூர், 6, நல்லம்பள்ளி, 5, ஒகேனக்கல், 6, மாரண்டஹள்ளி, 2 மி.மீ., என, மாவட்டத்தில் மொத்தம், 128.20 மி.மீ., எனவும், சராசரியாக, 14.24 மி.மீ., மழையும் பதிவானது.
