/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பாப்பிரெட்டிப்பட்டியில் 17 வி.ஏ.ஓ.,க்கள் இட மாற்றம்
/
பாப்பிரெட்டிப்பட்டியில் 17 வி.ஏ.ஓ.,க்கள் இட மாற்றம்
பாப்பிரெட்டிப்பட்டியில் 17 வி.ஏ.ஓ.,க்கள் இட மாற்றம்
பாப்பிரெட்டிப்பட்டியில் 17 வி.ஏ.ஓ.,க்கள் இட மாற்றம்
ADDED : ஜூலை 03, 2025 01:14 AM
பாப்பிரெட்டிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி தாலுகாவில், 45 வருவாய் கிராமங்கள் உள்ளன. இதில், 'அ' கிராமத்தில் ஓராண்டு பணியாற்றிய வி.ஏ.ஓ., க்களுக்கும், 'ஆ' கிராமத்தில், 3 ஆண்டுகள் பணியாற்றிய வி.ஏ.ஓ.,க்களுக்கும் பொது கலந்தாய்வு அரூர் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் பாப்பிரெட்டிப்பட்டியில் பணியாற்றிய நித்யா, மோளையானுாருக்கும், அங்கு பணிபுரிந்த சுரேஷ் பாபு பாப்பிரெட்டிப்பட்டிக்கும், கடத்துாரில் பணிபுரிந்த வெங்கடேசன் தாளநத்ததிற்கும், அங்கு பணியாற்றிய குமார் கடத்துாருக்கும் இடமாறுதல் பெற்றனர்.
வெங்கடசமுத்திரம் சுரேஷ் ஆலாபுரத்திற்க்கும், அங்கு பணிபுரிந்த அப்சரின் மஞ்சவாடிக்கும், மஞ்சவாடியில் பணியாற்றிய நாகஜோதி இருளப்பட்டிக்கும், இங்கு பணியாற்றிய கதிரவன் எச்.புதுப்பட்டிக்கும், எச்.புதுப்பட்டியில் பணியாற்றி வந்த சிவன், மணியம்பாடிக்கும், இங்கு பணியாற்றிய தாரகேஷ்வரிசின்ஹா சிங்கிரிஹள்ளிக்கும் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர். சிங்கிரிஹள்ளி ஜெயந்தி போசிநாய்க்கனஹள்ளிக்கும், இங்கு பணியாற்றிய பெருமாள், பொ.மல்லாபுரத்திற்கும், பொ.மல்லாபுரத்தில் பணியாற்றிய சாமிநாதன், பே.தாதம்பட்டிக்கும் மாற்றப்பட்டனர். பே.தாதம்பட்டி நாகராஜ், வாச்சாத்திக்கும், இங்கு பணியாற்றிய வந்த மதியழகன், வெங்கட சமுத்திரத்திற்கும் மாற்றப்பட்டனர். அ.பள்ளிப்பட்டி சங்கர் அதிகாரரப்பட்டிக்கும், இங்கு பணியாற்றிய விஜயன், அ.பள்ளிப்பட்டிக்கும் இடமாற்றம் செய்து அரூர் ஆர்.டி.ஓ., சின்னுசாமி உத்தரவிட்டுள்ளார்.