ADDED : மார் 10, 2025 01:13 AM
2 மாணவியர் உட்பட 5 பேர் மாயம்
இண்டூர்:தர்மபுரி மாவட்டம், அதப்பாடி அடுத்த, சின்னகாம்பட்டியை சேர்ந்த பூர்ணிமா, 27. இவரது கணவர் பத்மநாபன். இவர்ளுக்கு மகள், மகள் உள்ளனர். கடந்த ஜன., 29 அன்று பூர்ணிமா மாயமானார்.
* செட்டிகரை அடுத்த, நீலாபுரத்தை சேர்ந்த கோபிகா, 21. இவர் இண்டூர் அருகே உள்ள, தனியார் கல்லுாரியில், எம்.எஸ்சி., முதலாமாண்டு படித்து வந்தார். கடந்த, 7ல் மாயமானார். பெற்றோர் புகார்படி, இண்டூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
* பென்னாகரம் அடுத்த, கெட்டூரை சேர்ந்த ஞானபிரியா, 21, இவர் டி.பார்ம் படித்துவிட்டு, கடந்த, 2 வருடமாக வீட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில், கடந்த, 7 அன்று மாயமானார்.
* பென்னாகரம் அடுத்த, நீர்குந்தி கிராமத்தைச் சேர்ந்த, 16 வயது மாணவி பிளஸ் 1 படித்து வந்தார். அவர் மொபைலில் பேசியதை அவரின் தாய் கண்டித்துள்ளார். நேற்று முன்தினம் மாணவி மாயமானார். பெற்றோர் புகார் படி, பென்னாகரம் போலீசார் விசாரிக்கின்றனர்.
* நல்லம்பள்ளி அடுத்த, மிட்டாதின்னஹள்ளியை சேர்ந்தவர் ஜெகன், 14. அன்னசாகரம் அடுத்த, எரங்காட்டுகொட்டையை சேர்ந்தவர் ஸ்ரீதர், 14. இருவரும் காரவோனி அருகே உள்ள, தனியார் பள்ளியில், 9ம் வகுப்பு படித்து வந்தனர். நேற்று முன்தினம் காலை பள்ளிக்கு சென்றவர்கள் மாயமாகினர். பெற்றோர் பள்ளி நிர்வாகத்தில் கேட்டபோது, மாணவர்கள் காரவோனி பஸ் ஸ்டாப்பில் இருந்து, வீட்டுக்கு சென்று விட்டதாக தெரிவித்தனர். பெற்றோர் புகார் படி, மதிக்கோன்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.