ADDED : மே 25, 2026 06:04 AM
அ நிறம் | அளவு
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த அகரம் கிராமத்தை சேர்ந்த லாவண்யா, 21. இவர் தர்மபுரி அருகே தடங்கம் பகுதியில் உள்ள தனியார் கல்லுாரியில் பி.ஏ., இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த, 22ம் தேதி கல்லுாரிக்கு சென்றவர் மாயமானார்.
அதேபோல், காரிமங்கலம் அடுத்த பட்டிகாரன்-கொட்டாய் கிராமத்தை சேர்ந்த லட்சுமி, 19. இவர் தடங்கத்தில் உள்ள தனியார் கல்லுாரியில் பி.எஸ்.சி., மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த, 22ம் தேதி கல்லுாரிக்கு சென்றவர் மாய-மானார். பெற்றோர் புகார் படி, அதியமான்-கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
