/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பாலக்கோடு அருகே பஸ் கவிழ்ந்து 20 பேர் காயம்; 'கிரிப்' இல்லாத சாலையால் தொடரும் விபத்து
/
பாலக்கோடு அருகே பஸ் கவிழ்ந்து 20 பேர் காயம்; 'கிரிப்' இல்லாத சாலையால் தொடரும் விபத்து
பாலக்கோடு அருகே பஸ் கவிழ்ந்து 20 பேர் காயம்; 'கிரிப்' இல்லாத சாலையால் தொடரும் விபத்து
பாலக்கோடு அருகே பஸ் கவிழ்ந்து 20 பேர் காயம்; 'கிரிப்' இல்லாத சாலையால் தொடரும் விபத்து
ADDED : அக் 16, 2024 07:27 AM
பாலக்கோடு: பாலக்கோடு அருகே, அரசு பஸ் கவிழ்ந்ததில், 20 பயணிகள் காயமடைந்தனர்.
பெங்களூருவிலிருந்து ஈரோட்டுக்கு ஒரு அரசு பஸ் நேற்று காலை, 10:00 மணிக்கு, 40 பயணிகளுடன் புறப்பட்டது. சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த டிரைவர் கோவிந்தராஜ், 37, ஓட்டினார். நடத்துனர் நடராஜ், 45, பணியில் இருந்தார். ஓசூர் - தர்மபுரி நெடுஞ்சாலையில், தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த கோடியூர் வந்தபோது, முன்னால் நின்ற அரசு டவுன் பஸ் மீது மோதாமல் இருக்க, கோவிந்தராஜ் திடீர் பிரேக் போட்டதில் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது.
பஸ்சில் பயணித்த கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை சாலம்மாள், 33; பனைக்குளம் வெண்ணிலா, 50; பெங்களூரு சாந்தி, 55, சீனிவாசன், 53 சத்யாரத்தினம், 46; தர்மபுரி பாஸ்கரன், 36; சேலம் சிவராஜ், 43, ஓட்டுனர், நடத்துனர் என, 10 பெண்கள் உட்பட, 20 பேர் காயமடைந்தனர். பாலக்கோடு போலீசார், தாசில்தார் ரஜினி ஆகியோர் போக்குவரத்தை சீர்செய்து, காயமடைந்தவர்களை மீட்டு, பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.இதே பகுதியில் கடந்த ஆறு மாதத்தில், 4 லாரி, 3 பஸ் என ஏழு வாகனங்கள் விபத்தில் சிக்கியுள்ளன. குறிப்பாக கடந்த ஜூலை, 15ல் பஸ்கள், லாரி அடுத்தடுத்து மோதிக் கொண்டதில், 110 பேர் காயமடைந்தனர். இப்பகுதியில் சாலை உரிய பிடிமானமின்றி உள்ளதே விபத்துக்கு காரணமாக உள்ளது.
இதை சீரமைக்க மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அந்த விபத்து நடந்தபோது சாலை சீரமைக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் கூறியது. நடவடிக்கை எடுக்காத நிலையில், எட்டாவது விபத்து நடந்து விட்டது. நேற்று விபத்தை தொடர்ந்து சாலையின் பிடிமானத்தை அதிகரிக்க, பொக்லைன் மூலம், 2 இன்ச் அளவுக்கு, 100 மீட்டர் துாரத்துக்கு சாலையை சுரண்டி விட்டனர். அடுத்த விபத்து நடக் கும் முன் சாலையை முழுமையாக சீரமைக்க, வேண்டுகோள் விடுத்துள்ளனர்.