தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/தனியார் பஸ் கவிழ்ந்து 25 பேர் காயம்

தனியார் பஸ் கவிழ்ந்து 25 பேர் காயம்

தனியார் பஸ் கவிழ்ந்து 25 பேர் காயம்


ADDED : ஜூலை 10, 2026 04:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 10, 2026 04:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காரிமங்கலம்:காரிமங்கலம் அருகே, தனி யார் பஸ் கவிழ்ந்த விபத்தில், 25 பேர் காயமடைந்தனர்.

கிருஷ்ணகிரியில் இருந்து தர்மபுரிக்கு, நேற்று காலை, 9:00 மணிக்கு, 'குமரவேல்' என்ற தனியார் பஸ், 70 பயணிகளுடன் சென்றது. பஸ்சை காரிமங்கலத்தை சேர்ந்த சந்தோஷ், 32, என்பவர் ஓட்டினார். கிருஷ்ணகிரி - தர்மபுரி தேசிய நெடுஞ்சாலையில், காரிமங்கலம் அடுத்த பொன்னேரி அருகே அதிவேகமாக சென்ற பஸ், முன்னால் சென்ற, 3 கார்களை அடுத்தடுத்து முந்திச் செல்ல முயன்றது. அப்போது, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து, நெடுஞ்சாலையின் இடதுபுறமிருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில், பஸ்சிலிருந்த, 21 பேர் லேசான காயமடைந்தனர்.

மேலும், 4 பேர் படுகாயமடைந்தனர். சம்பவ இடம் சென்ற காரிமங்கலம் போலீசார் மற்றும் பொதுமக்கள், காயமடைந்தவர்களை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம், தர்மபுரி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவ

மனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தால், சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காரிமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.

அதிவேக பஸ்கள்

கிருஷ்ணகிரி - தர்மபுரி வழித்தடத்தில், 'பீக் அவ ர்ஸ்' நேரத்தில் இயக்கப்படும் தனியார் பஸ்களில் அதிகளவில் பயணிகளை ஏற்றிச் செல்வதுடன், அதிவேகமாக இயக்கப்படுவதாக பொதுமக் கள் புகார் தெரிவித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us