ADDED : ஜூலை 10, 2026 04:51 AM
அ நிறம் | அளவு
தர்மபுரி:தர்மபுரி
செந்தில் நகரிலுள்ள ரேஷன் கடையில், கலெக்டர் சரவணன் நேற்று ஆய்வு
மேற்கொண்டார். அப்போது, கடையில் வழங்கப்படும் அரிசி, சர்க்கரை,
கோதுமை, துவரம் பருப்பு, பாமாயில் உள்ளிட்ட அனைத்து பொருட்களையும்
பரிசோதித்து, அதன் தரம் குறித்து பணியாளரிடம் கேட்டறிந்தார்.
மேலும், மின்னணு தராசுகள் மற்றும் விற்பனை முனைய கருவிகள் சரியாக
செயல்படுகின்றனவா என்பதை ஆய்வு செய்ததுடன், குடும்ப
அட்டைகளுக்கு போதுமான அளவு அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்கள்
முறையாக வழங்கப்படுகிறதா என்பது குறித்து, குடும்ப
அட்டைதாரர்களிடம் கேட்டறிந்தார்.
