ADDED : ஜூன் 17, 2025 02:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி, தமிழக முதல்வர் ஸ்டாலின், தஞ்சாவூர் மாவட்டத்தில், அரசு போக்குவரத்து துறையின் சார்பில், புதிய விரிவான மினி பஸ் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
அதை தொடர்ந்து, தர்மபுரி டவுன் பஸ் ஸ்டாண்டில், காணொலி காட்சி மூலம் நடந்த நிகழ்ச்சிக்கு, தர்மபுரி, தி.மு.க., -- எம்.பி., மணி, தர்மபுரி, பா.ம.க., - -எம்.எல்.ஏ., வெங்கடேஷ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட கலெக்டர் சதீஸ், 26 மினி பஸ்களை தொடங்கி வைத்து, வழித்தடங்களுக்கான ஆணையை வழங்கினார்.
தொடர்ந்து, 'சாலை பாதுகாப்பு- உயிர் பாதுகாப்பு' மற்றும் பைக் ஓட்டுனர்களுக்கு தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்த, இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை கலெக்டர் சதீஸ் வழங்கினார்.