/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்த முகாமில் 28,297 பேர் விண்ணப்பம்
/
வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்த முகாமில் 28,297 பேர் விண்ணப்பம்
வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்த முகாமில் 28,297 பேர் விண்ணப்பம்
வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்த முகாமில் 28,297 பேர் விண்ணப்பம்
ADDED : நவ 25, 2024 01:40 AM
கிருஷ்ணகிரி: இந்திய தேர்தல் ஆணைய உத்தரவு படி வரும், 2025 ஜன., 1ஐ தகுதி நாளாக கொண்டு, வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த மாதம், 29ல் வெளியிடப்பட்டது. தொடர்ந்து, பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் மேற்கொள்ள சுருக்க முறை திருத்த பணிகள் நடக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள, 6 சட்-டசபை தொகுதிகளில், 1,096 ஓட்டுச்சாவடிகளில் நடந்த இந்த சிறப்பு முகாமில், பெயர் சேர்க்க 20,196 பேரும், பெயர் நீக்க, 2,160 பேரும், திருத்தம் செய்ய, 5,941 பேரும் என மொத்தம், 28,297 பேர் விண்ணப்பம் அளித்துள்ளனர்.
மேலும், Voters.eci.gov.in என்ற இணையதளம் மூலமாகவும், Voter helpline என்ற மொபைல் செயலி மூலமாகவும் விண்ணப்பிக்-கலாம். வாக்காளர்கள் தங்கள் பதிவை உறுதி செய்ய, 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் மூலமாகவும் தெரிந்து கொள்-ளலாம். சிறப்பு சுருக்கமுறை திருத்தத்திற்கான விண்ணப்பங்கள் வரும், 28 வரை பெறப்படும் என, அதிகாரி கள் தெரிவித்தனர்.