நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி, பென்னாகரம் அருகே கண்ணம்பள்ளியை சேர்ந்தவர் ரம்யா, 23. பி.எஸ்சி., பி.எட்., படித்துள்ளார். நேற்று முன்தினம் மாயமானார். பெற்றோர் புகார் படி, பெரும்பாலை போலீசார் விசாரிக்கின்றனர்.
நல்லம்பள்ளி தாலுகா, பாலவாடி அடுத்த, மேல் குள்ளம்பட்டியை சேர்ந்த புவனேஸ்வரி, 27, இவர் கடந்த, 2ல் மாயமானார். பெற்றோர் புகார் படி, பாப்பாரப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
பென்னாகரம் அருகே அரங்காபுரத்தை சேர்ந்தவர் மகாலட்சுமி, 22. இவரது கணவர் ராஜகோபால், 28. தம்பதிக்கு ஒன்றரை வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. ராஜகோபால் தர்மபுரியிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப் பட்டுள்ளார். அவரை பார்க்க கடந்த, 3 அன்று வந்த மகாலட்சுமி குழந்தையுடன் மாயமானார். மகாலட்சுமியின் மாமனார் சுந்தரேசன் புகார் படி,
அதியமான்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.