/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
காட்டு பன்றியை வெடி வைத்து வேட்டையாடிய 4 பேர் கைது
/
காட்டு பன்றியை வெடி வைத்து வேட்டையாடிய 4 பேர் கைது
காட்டு பன்றியை வெடி வைத்து வேட்டையாடிய 4 பேர் கைது
காட்டு பன்றியை வெடி வைத்து வேட்டையாடிய 4 பேர் கைது
ADDED : ஜூலை 14, 2025 04:12 AM
பென்னாகரம்: தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே ஒகேனக்கல் வனப்ப-குதிக்கு உட்பட்ட பென்னாகரம் பீட் ஜோல்ரான் குட்டை பகு-தியில் வனவிலங்குகளை வேட்டையாடுவதாக, ஒகேனக்கல் வனச்சரக அலுவலருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்-படி, ஒகேனக்கல் வனச்சரக அலுவலர் சிவக்குமார், வனவர் சுதாகர், வனக்காப்பாளர்
கள் காளிமுத்து, சின்னசாமி ஆகியோர் அடங்கிய குழுவினர், நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்-போது காட்டுப்பன்றியை வெடி வைத்து வேட்டையாடிய, எரங்-காடு பகுதியை சேர்ந்த பாரத், 24, சின்ன துங்கல் பகுதியை சேர்ந்த சிவசக்தி, 23, பெரியசாமி, 42, தாசம்பட்டியை சேர்ந்த வீர-மணி, 24 உள்ளிட்ட நான்கு பேரை வனத்துறையினர் கைது செய்-தனர்.
மாவட்ட வன பாதுகாப்பு அலுவலர் ராஜாங்கம் உத்தரவின்படி காட்டுப்பன்றியை வேட்டையாடிய, 4 பேர் மீது வழக்குப்பதிந்து, அவர்கள் பயன்படுத்திய, 20 வெடிகள், இருசக்கர வாகனம் ஆகி-யவற்றை பறிமுதல் செய்தனர். வனப்பகுதியில் அத்து மீறி நுழைந்து, வனவிலங்குகளை வேட்டையாடி, அதன் இறைச்சியை விற்பனை செய்வது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, ஒகேனக்கல் வனத்து-றையினர் எச்சரித்துள்ளனர்.