ADDED : டிச 13, 2025 05:39 AM
பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டியில், வெறி நாய் கடித்து, மூன்று பெண்கள் உள்ளிட்ட 5 பேர் காயமடைந்தனர்.
பாப்பிரெட்டிப்பட்டி, காமராஜர் நகரை சேர்ந்த ஆண்டி, 77, என்-பவர் கடந்த வாரம் இறந்தார். இவரது காரியதிற்க்காக இவரது உறவினர்கள் பலர் வந்திருந்தனர். அப்போது வெறிநாய் அவர்-களை துரத்தி துரத்தி கடித்தது. இதில் சிலர் தப்பித்து ஓடினர். அங்கிருந்தவர்கள் நாயை அடித்து துரத்தினர். இதில் பட்டு கோனாம்பட்டியை சேர்ந்த ரகு, 40, அண்ணா நகர் பழனி, 60, மற்றும் 3 பெண்கள் உள்ளிட்ட, 5 பேர் காயமுற்றனர். உடனடி-யாக அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு ஊசி போடப்பட்டு மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர்.பாப்பிரெட்டிப்பட்டி பஸ் ஸ்டாண்ட், தர்மபுரி ரோடு, செங்கல்-பட்டு பிள்ளையார் கோவில் தெரு பகுதிகளில் தெரு நாய்கள் அதிகளவில் உள்ளது. பஸ் ஸ்டாண்டை சுற்றி சிக்கன், மட்டன் கடைகள் இயங்குகிறது. இக் கடைகளுக்கு முன் குவியும் வெறி-நாய்களால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். வெறி நாய்களை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

