sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

சாலை பணிக்கு ரூ.5.27 கோடி நிதி ஒதுக்கியும் வனத்துறை அனுமதியில்லை; மக்கள் மறியல்

/

சாலை பணிக்கு ரூ.5.27 கோடி நிதி ஒதுக்கியும் வனத்துறை அனுமதியில்லை; மக்கள் மறியல்

சாலை பணிக்கு ரூ.5.27 கோடி நிதி ஒதுக்கியும் வனத்துறை அனுமதியில்லை; மக்கள் மறியல்

சாலை பணிக்கு ரூ.5.27 கோடி நிதி ஒதுக்கியும் வனத்துறை அனுமதியில்லை; மக்கள் மறியல்


ADDED : டிச 12, 2025 05:34 AM

Google News

ADDED : டிச 12, 2025 05:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த கோட்டப்பட்-டியில் இருந்து, கருமந்துறை செல்லும் தார்ச்சா-லையை வேலனுார், ஏ.கே.தண்டா, எஸ்.தாதம்-பட்டி, நரிப்பள்ளி உள்ளிட்ட, 40க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்துகின்றனர். இச்சாலை வழியாக, திருவண்ணாமலை, சேலம், அரூர் உள்-ளிட்ட இடங்களுக்கு அரசு, தனியார் பஸ்கள் சென்று வருகின்றன.

கோட்டப்பட்டியில் இருந்து சிட்லிங் செல்லும், 8 கி.மீ., சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்-ளது.

இதனால், வழியில் வாகனங்கள் பழுதடை-வதால், வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் அவ-திக்கு ஆளாகி, விபத்தில் சிக்குகின்றனர். விளை-பொருட்களை கொண்டு செல்ல முடியாமல், விவசாயிகள் சிரமப்படுகின்றனர். கடந்த, 3 ஆண்-டுகளுக்கு மேலாக சேதமடைந்துள்ள இச்சா-லையை சீரமைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், சாலைமறியல் என பல போராட்டங்களை அப்பகுதி மக்கள் நடத்தினர். இதையடுத்து கடந்த, 15 நாட்களுக்கு முன், 5.27 கோடி ரூபாய் மதிப்பில், கோட்டப்பட்டி - சிட்லிங் சாலையை சீரமைக்க டெண்டர் விடப்பட்டது. ஆனால், சாலை வனத்துறைக்கு சொந்தமானது என்பதால், வனத்துறை

அனுமதி கிடைக்கவில்லை.

இதனால், ஆத்திரமடைந்த சிட்லிங், தாதம்பட்டி உள்ளிட்ட, 15க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சாலையை சீரமைக்கக்கோரி, நேற்று காலை, 8:30 மணிக்கு, சேலம் - கோட்டப்பட்டி சாலையில், சிட்லிங் கூட்ரோட்டில் சாலைமறியலில் ஈடுபட்-டனர். அவர்களிடம், அரூர் ஆர்.டி.ஓ., செம்மலை, அரூர் தாசில்தார் பெருமாள், கோட்டப்பட்டி இன்ஸ்பெக்டர் ஆதாம் அலி ஆகியோர் பேச்சு-வார்த்தை நடத்தினர். அதில், ஒரு வார காலத்-திற்குள் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்-கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து, மாலை, 6:30 மணிக்கு பொதுமக்கள் சாலைமறி-யலை கைவிட்டனர்.






      Dinamalar
      Follow us