/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கருக்கலைப்பின் போது பெண் சாவு; 3 பேர் கைது
/
கருக்கலைப்பின் போது பெண் சாவு; 3 பேர் கைது
ADDED : டிச 12, 2025 05:33 AM
ஏரியூர்: தர்மபுரி மாவட்டம், ஏரியூர் அருகே உள்ள பூச்-சூரை சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி ரம்யா, 26. இவர்களுக்கு, 2 பெண் குழந்தைகள் உள்ளன. ரம்யா மீண்டும் கர்ப்பமானார். கடந்த, ஒன்றாம் தேதி ரம்யா மாடி படியில் இருந்து தவறி விழுந்து இறந்ததாக, அவரது கணவர் கண்ணன் உறவினர்களை நம்ப வைத்துள்ளார்.
ஆனால், ரம்-யாவின் இறப்பில்சந்தேகம் இருப்பதாக, அவரது உறவினர்கள் ஏரியூர் போலீசில் புகார் அளித்தனர்.
இன்ஸ்பெக்டர் சுரேஷ் விசாரணையில், ரம்யாவின் கருவில் குழந்தை பாலினம் அறிய கண்ணன், சேலம் மாவட்டம் ஓமலுாரை சேர்ந்த செவிலியர் சுகன்யா, 35, புரோக்கர் வனிதா, 35, ஆகியோரை சந்தித்துள்ளார். இதில், கருவில் உள்ளதும் பெண் குழந்தை என அறிந்து, ரம்யா-விற்கு அவர்கள் கருக்கலைப்பு செய்தனர். அப்-போது, அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதில், சேலம் அரசு மருத்துவமனையில் ரம்யாவை அனும-தித்து, பின் மேல் சிகிச்சைக்கு கோவையிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பியபோது, வழியிலேயே ரம்யா உயிரிழந்து, விசாரணையில் தெரியவந்தது. சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்த செவிலியர் சுகன்யா, புரோக்கர் வனிதா மற்றும் கண்ணனை போலீசார் கைது செய்தனர்.

