sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

அத்திமரத்துாரில் மின்தடையால் மறியல்

/

அத்திமரத்துாரில் மின்தடையால் மறியல்

அத்திமரத்துாரில் மின்தடையால் மறியல்

அத்திமரத்துாரில் மின்தடையால் மறியல்


ADDED : டிச 13, 2025 05:39 AM

Google News

ADDED : டிச 13, 2025 05:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஏரியூர்: ஏரியூர் அருகே அத்திமரத்துார் கிராமத்தில், தொடர்ந்து நான்கு நாட்களாக மின்தடை ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

ஏரியூர் ஒன்றியம், தொன்னகுட்டஅள்ளி பஞ்சாயத்துக்கு உட்-பட்ட அத்திமரத்துார் கிராமத்தில், 300 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள மக்கள் விவசாயத்தையே நம்பி உள்-ளனர். தொடர்ந்து நான்கு நாட்களாக மின்சாரம் இல்லாததால், குடிப்பதற்கு தண்ணீர் கூட இல்லை. மேலும் விவசாய நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள நெல், கேழ்வரகு, கம்பு தானிய பயிர்களும் அவரை, நிலக்கடலை உள்ளிட்ட பயிர்கள் நான்கு நாட்களாக நீரின்றி நிலத்திலேயே கருகும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இதுகு-றித்து, பென்னாகரம் மின்சார வாரிய அலுவலகத்தில் புகார் தெரி-வித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி, அவ்வ-ழியே வந்த டவுன் பஸ்சை தடுத்து மறியலில் ஈடுபட்டனர். ஏரியூர் இன்ஸ்பெக்டர் சுரேஷ், பென்னாகரம் தாசில்தார் சண்முக-சுந்தரம், மின் உதவி பொறியாளர் வித்யா ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து, சாலை மறியலில் ஈடுபட்டிருந்த கிராம மக்க-ளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் தற்காலிகமாக, 63 கிலோ வாட் டிரான்ஸ்பார்மர் பொருத்-தப்பட்டு, வீட்டு உபயோகத்திற்கு மட்டும் மின்சாரம் வழங்குவ-தாகவும் செவ்வாய்க்கிழமை, 100 கிலோ வாட்ஸ் பொருத்தப்-படும் என்று தெரிவித்தனர். இதையடுத்து, கிராம மக்கள் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us