/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
சுவாமி ஐயப்ப உற்சவமூர்த்திக்கு மண்டல, யாக சாலை பூஜை
/
சுவாமி ஐயப்ப உற்சவமூர்த்திக்கு மண்டல, யாக சாலை பூஜை
சுவாமி ஐயப்ப உற்சவமூர்த்திக்கு மண்டல, யாக சாலை பூஜை
சுவாமி ஐயப்ப உற்சவமூர்த்திக்கு மண்டல, யாக சாலை பூஜை
ADDED : டிச 13, 2025 05:37 AM

தர்மபுரி:தர்மபுரி டவுன் வள்ளலார் திடலில், அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில், சுவாமி ஐயப்ப உற்சவமூர்த்திக்கு மண்டல பூஜை, யாகசாலை பூஜை நேற்று நடந்தது.
அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில், சுவாமி ஐயப்பன் உற்-சவமூர்த்திக்கு மண்டல பூஜை மற்றும் யாகசாலை பூஜை, சிறப்பு அன்னதானம் உள்ளிட்டவை நேற்று நடந்தது. காலை, 5:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜை தொடங்கி-யது. தொடர்ந்து நவகிரக சாந்தி, நட்சத்திர சாந்தி, வார சாந்தி என பல்-வேறு, பூஜைகளும் நடந்தன. 6:00 மணி முதல், 8:00 மணி வரை மகாலட்சுமி ேஹாமம், ராஜ சியாமளா தேவி ஹோமமும், தொடர்ந்து, ஐயப்பன், அய்யனாரப்பன், கருப்பசாமி மற்றும் பரி-வார தெய்வங்களுக்கு சாந்தி ஹோமம், விநாயகர், முருகர், ஐயப்பன், அம்பாள், அங்காள பரமேஸ்வரிக்கு அர்ச்சனையும் சிறப்பு பூஜைகளும் நடந்தன. இதில், ஐயப்பன் சிறப்பு அலங்கா-ரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். யாகசாலை பூஜைக்கு வந்த பக்தர்கள் அனைவருக்கும், விழாக்குழு சார்பில் அன்ன-தானம் வழங்கினர்.

