/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அதியமான்கோட்டை காலபைரவர் கோவிலில் காலாஷ்டமி விழா
/
அதியமான்கோட்டை காலபைரவர் கோவிலில் காலாஷ்டமி விழா
ADDED : டிச 13, 2025 05:36 AM

அதியமான்கோட்டை: அதியமான்கோட்டை, காலபைரவர் கோவிலில் நேற்று நடந்த காலாஷ்டமி விழாவில், காலபைரவர் தங்க கவச அலங்காரத்தில் அருள் பாலித்தார்.
தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டையில் உள்ள, தட்ஷண-காசி காலபைரவர் கோவிலில், காலபைரவர் ஜெயந்தி எனும் காலாஷ்டமி விழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு விஸ்வரூப தரிசனம், மஹா கணபதி ஹோமம், 64 பைரவர் ஹோமம், ஏகாந்த ருத்ர ஹோமம், கோ பூஜை, குதிரை பூஜை உள்ளிட்டவை நடந்தன. காலை, 8:30 மணிக்கு உற்சவர் திருத்தேரில் கோவிலை வலம் வந்தார். 9:00 மணிக்கு, 108 சங்கு அபிஷேகம், சிறப்பு அபிஷே-கத்தை தொடர்ந்து, மூலவர் தங்க கவச அலங்காரத்தில் பத்தர்க-ளுக்கு அருள் பாலித்தார். பின்னர், 18 குருக்களை கொண்டு கால-பைரவருக்கு, ஒரு லட்சத்து எட்டு அர்ச்சனை நடந்தது.
நேற்று இரவு, 10:00 மணிக்கு, 1,008 கிலோ மிளகாய், 108 கிலோ மிளகு கொண்டு சத்ரு சம்ஹார யாகம் நடந்தது. இன்று அதிகாலை, 2:00 மணிக்கு நாய் வாகனத்தில் உற்சவர் கோவிலை வலம் வந்தார். 3:00 மணிக்கு 1,008 லிட்டர் பால் அபிஷேகம், கலச அபிஷேகம், சத்ரு சம்ஹார பைரவர் அலங்காரம், சதுர்வேத பாராயணம் சிறப்பு தரிசனம் உள்ளிட்டவை நடந்தது.
இன்று மாலை, 5:00 மணிக்கு பைரவ புஷ்கரணி எனப்படும், வைரவநாதர் திருக்குளத்தில் தெப்ப உற்சவம் நடக்கவுள்ளது. கோவிலுக்கு வந்த பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை, ஹிந்து சமய அறநிலையத்-துறை அலுவலர்கள்
செய்திருந்தனர்.

