/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
குளியல் வீடியோ வெளியானதை கண்டித்து பெண்கள் ஆர்ப்பாட்டம்
/
குளியல் வீடியோ வெளியானதை கண்டித்து பெண்கள் ஆர்ப்பாட்டம்
குளியல் வீடியோ வெளியானதை கண்டித்து பெண்கள் ஆர்ப்பாட்டம்
குளியல் வீடியோ வெளியானதை கண்டித்து பெண்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 13, 2025 01:24 AM
தர்மபுரி: அணையில் மீன் திருட்டை கண்காணிக்க பொருத்தப்பட்ட கேமரா வாயிலாக, பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்து வெளியிட்டதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே நாகாவதி அணையில், மீன்பாசி குத்தகையை, அரகாசனஹள்ளி பஞ்., எர்ரப்பட்டி மாதேஷ், 48, ஏலம் எடுத்துள்ளார்.
அணையில் வெளியாட்கள் மீன் பிடிப்பதை கண்காணிக்க அணை நடுப்பகுதியில் 'சிசிடிவி' கேமரா பொருத்தியுள்ளார்.
இந்த கேமராவில், கிராமங்களைச் சேர்ந்த பெண்கள், அணை பகுதியில், துணி துவைப்பது, குளிப்பது மற்றும் இயற்கை உபாதைகளுக்கு சென்ற காட்சிகள் பதிவாகின.
இவை சமூக வலைதளங்களில் பரவின. அதிர்ச்சியடைந்த கிராம மக்கள், இண்டூர் போலீசில் நேற்று முன்தினம் புகாரளித்தனர்.
போலீசார் கண்டு கொள்ளாததால், கழனிகாட்டூர் கிராமத்தில், நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அணை பகுதியில் கேமராக்களை அகற்ற வேண்டும்.
பெண்களின் குளியல் வீடியோக்களை வலைதளத்தில் பரப்பியவர்களை கைது செய்ய வேண்டும் என, வலியுறுத்தினர்.

