ADDED : ஜூலை 20, 2026 01:53 AM
தர்மபுரி: தர்மபுரி டவுன் போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ., சுந்தரமூர்த்தி நேற்று முன்தினம் காலை, 11:00 மணிக்கு தர்மபுரி அரசு மருத்து-வமனை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார்.
அப்போது, செட்டிக்கரை கீழ்நாயக்கன்பட்டியை சேர்ந்த கார் டிரைவர் மோகன்பாபு, 38, என்பவர் அரசு பஸ்சை தடுத்து நிறுத்தி, போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தி, பஸ் கண்ணா-டியை உடைத்து விடுவதாகவும், பஸ்சுடன் அனைவரையும் பெட்ரோல் ஊற்றி எரித்து விடுவேன் என மிரட்டல் விடுத்தார். இதையடுத்து, மோகன் பாபுவை போலீசார் கைது செய்தனர்.
அதேபோல், காரிமங்கலம் சேசப்பநாயுடு கொட்டாய் பகுதியை சேர்ந்த பிலால், 45, பென்னாகரம் தாலுகா காமராஜ்பேட்டையை சேர்ந்த கார்த்திகேயன், 34, அரூர் அம்பேத்கர் நகரை சேர்ந்த அக-துாயவன், 22, பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா பட்டுக்கோணம்பட்-டியை சேர்ந்த மாது, 31, பென்னாகரம் தாலுகா ரங்காபுரத்தை சேர்ந்த சந்தோஷ்குமார், 36, மாரண்டஹள்ளி சி.எம்.புதுார் கிரா-மத்தை சேர்ந்த தினேஷ்குமார், 28 ஆகியோரை அந்தந்த பகுதி போலீசார் கைது செய்தனர். மேலும் கைது செய்யப்பட்டவர்கள் மீது, போலீஸ் ஸ்டேஷன்களில் பல்வேறு வழக்கு உள்ளது குறிப்-பிடதக்கது.
