/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஜி.ஹெச்.,ஐ துாய்மையாக பராமரிக்க அறிவுரை
/
ஜி.ஹெச்.,ஐ துாய்மையாக பராமரிக்க அறிவுரை
ADDED : மே 19, 2025 01:36 AM
பாலக்கோடு: பாலக்கோடு அரசு மருத்துவமனையில், தர்மபுரி மாவட்ட கலெக்டர் சதீஸ் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, புற-நோயாளிகள் பிரிவு, சமையல் அறையில் நோயாளிகளுக்கு வழங்க தயார் செய்யப்படும் உணவுகள் குறித்து பணியாளர்க-ளிடம் கேட்டறிந்தார்.
தொடர்ந்து, தீவிர சிகிச்சை பிரிவு, அவசர கால பிரிவு, எலும்பு முறிவு சிகிச்சை பிரிவு, பொது மருத்துவம், பெண்கள் நலப்பிரிவு, குழந்தைகள் நலப்பிரிவு, விஷ முறிவுகள் சிகிச்சை மற்றும் விஷ முறிவு சிகிச்சைக்களுக்கான மருந்துகள் இருப்பு பிரிவுகளில் ஆய்வு மேற்கொண்டு நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவ அலுவலர் களிடம் கேட்டறிந்தார். மேலும், மருத்துவ மனையை துாய்மையாக பரா-மரிப்பதுடன், குடிநீர், மின்சாரம், கழிப்பறை அடிப்படை தேவை-களை சரியான முறையில் வழங்க மருத்துவர்கள் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார். ஆய்வின் போது, மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குனர் சாந்தி மற்றும் மருத்துவர்கள், செவி-லியர்கள் உடனிருந்தனர்.தொடர்ந்து, செல்லியம்பட்டி பஞ்.,க்கு உட்பட்ட வரகூர் ஏரியை துார்வாரும் பணியினை கலெக்டர் சதீஸ் ஆய்வு செய்தார்.