/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
14 நாட்களுக்கு பின் ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க அனுமதி
/
14 நாட்களுக்கு பின் ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க அனுமதி
14 நாட்களுக்கு பின் ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க அனுமதி
14 நாட்களுக்கு பின் ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க அனுமதி
ADDED : அக் 28, 2024 03:37 AM
ஒகேனக்கல்: ஒகேனக்கல் காவிரியாற்றில், 14 நாட்களுக்குப் பிறகு, பரிசல் மட்டும் இயக்க, தர்மபுரி மாவட்ட நிர்வாகம் அனுமதித்தது.
கர்நாடகா மற்றும் தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளான அஞ்-செட்டி, நாட்றாம்பாளையம், கேரிட்டி, கேம்பாகரை, பிலிகுண்-டுலு, ராசிமணல் உள்ளிட்ட இடங்களில் பெய்த மழையால், கடந்த ஒரு வாரமாக, ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து அதி-கரித்து வந்தது. நேற்று முன்தினம் முதல் மழை குறைந்ததால், ஒகேனக்கலுக்கு நீர்வரத்து சரிந்துள்ளது. தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் நேற்று முன்தினம் மாலை, 35,000 கன அடி-யாக இருந்த நீர்வரத்து, 25,000 கன அடியாக நேற்று காலை சரிந்-தது.நீர்வரத்து அதிகமாக இருந்ததால், 14 நாட்களாக காவிரி-யாற்றில், குளிக்க, பரிசல் இயக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. நேற்று நீர்வரத்து சற்றே குறைந்ததால், பரிசல் மட்டும் இயக்க, தர்மபுரி மாவட்ட நிர்வாகம் அனுமதித்தது. கோத்திக்கல் பரிசல் துறையிலிருந்து மணல் திட்டு வழியாக பரிசல் இயக்கப்பட்டது. அதேசமயம், 15 நாளாக குளிக்க தடை தொடர்ந்தது.

