ADDED : ஜன 29, 2025 07:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பென்னாகரம்:  பென்னாகரம் அடுத்த பணைகுளத்தில் கிராம அளவிலான வேளாண் முன்னேற்ற குழு குறித்த விவசாயிகளுக்கான பயிற்சி அட்மா திட்டத்தில் வழங்கப்பட்டது. பயிற்சி வேளாண் உதவி இயக்குனர் சுப்பிரமணியன் தலைமையில் நடந்தது. இதில், முன்னோடி இயற்கை விவசாயி தனசேகர் இயற்கை விவசாய முறைகள், அதனால் ஏற்படும் நன்மைகளை விளக்கினார்.
நுண்ணுயிர் உரம் மற்றும் நுண்ணுயிர் திரவம் அதன் பயன்கள் மற்றும் அதை பயன்படுத்தும் வழிமுறைகள் பற்றி பயிற்சி அளித்தார். உதவி வேளாண் அலுவலர் கோகிலா வேளாண் துறை சார்ந்த திட்டங்கள், பயிர் காப்பீடு மற்றும் சொட்டு நீர் பாசனம் முறை, அதன் பயன்கள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார். வட்டார தொழில் நுட்ப மேலாளர் அசோக்குமார் உழவன் செயலி, ஆத்மா திட்டங்கள், அட்மா திட்டம் குறித்து விளக்கினார்.

