/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஆத்துார் அருகே அ.தி.மு.க., பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம்
/
ஆத்துார் அருகே அ.தி.மு.க., பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம்
ஆத்துார் அருகே அ.தி.மு.க., பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம்
ஆத்துார் அருகே அ.தி.மு.க., பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம்
ADDED : நவ 01, 2025 01:42 AM
ஆத்துார், ஆத்துார் அருகே, ராமநாயக்கன்பாளையம் கிராமத்தில், அ.தி.மு.க., சார்பில், பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
இக்கூட்டத்தில், சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன் பேசுகையில்,
''அ.தி.மு.க., பூத் கமிட்டி நிர்வாகிகள் விழிப்புடன் இருக்க வேண்டும். தி.மு.க., ஆட்சியை அகற்றும் வகையில், தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
இந்த தேர்தலுடன், தி.மு.க.,வுக்கு முடிவுரை எழுத மக்கள் தயாராகிவிட்டனர். 2026 சட்டசபை தேர்தலில், சேலம் உள்பட அனைத்து மாவட்டங்களிலும், அ.தி.மு.க., கூட்டணி தான் வெற்றி பெறும்,'' என்றார். ஆத்துார் எம்.எல்.ஏ., ஜெயசங்கரன், ஒன்றிய செயலர் சேகர், மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலர் ராஜராஜசோழன், மாவட்ட மகளிர் அணி செயலர் லலிதா, தர்மபுரி மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளர் சாந்தகுமார், முன்னாள் ஊராட்சி தலைவர் மலைபெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.