ADDED : நவ 01, 2025 01:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பனமரத்துப்பட்டி, பனமரத்துப்பட்டி அருகே நத்தமேடு கிராமத்தில், 1,000 ஆண்டுகள் பழமையான சிவகாமி சமேத சிதம்பரேஸ்வரர் கோவில் உள்ளது.
திருச்செந்துார் முருகன் கோவிலில் பூஜிக்கப்பட்ட வேல், சிதம்பரேஸ்வரர் கோவில் நிர்வாகிகளிடம் ஆர்.எஸ்.எஸ்., மற்றும் பா.ஜ., நிர்வாகி கள் நேற்று வழங்கினர். அக்கோவிலில் உள்ள முருகன் சிலைக்கு வேல் சாற்றப்பட்டது.
பனமரத்துப்பட்டி, களரம்பட்டி, பெரமனுார், சத்தியநாராயணபுரம் ஆகிய இடங்களில் உள்ள முருகன் கோவிலுக்கும் வேல் வழங்கப்பட்டது.

