ADDED : ஜூலை 01, 2025 01:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாப்பிரெட்டிப்பட்டி, பாப்பிரெட்டிப்பட்டி கிழக்கு, மேற்கு ஒன்றிய, அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் நடந்தது. எம்.எல்.ஏ., கோவிந்தசாமி, ஒன்றிய செயலாளர்கள் விஸ்வநாதன், சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் தென்னரசு வரவேற்றார். கூட்டத்தில் மாவட்ட செயலாளர் அன்பழகன் எம்.எல்.ஏ., பேசினார்.
அனைத்து ஓட்டு சாவடிகளுக்கும் முகவர்களை நியமிக்க வேண்டும். வரும் சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., கூட்டணி வெற்றி பெற, தீவிர களப்பணியாற்ற வேண்டும். தி.மு.க., கொடுத்த வாக்குறுதிகள் நிறைவேற்றாதவை குறித்து, மக்களிடையே எடுத்துக் கூற வேண்டும். உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.