/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அ.தி.மு.க.,வின்54-வது ஆண்டுதுவக்க விழா
/
அ.தி.மு.க.,வின்54-வது ஆண்டுதுவக்க விழா
ADDED : அக் 16, 2025 01:01 AM
தர்மபுரி: தர்மபுரி, அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் அன்பழகன் எம்.எல்.ஏ., வெளியிட்டுள்ள அறிக்கை:-
தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., தொடங்கி வைத்து, ஜெயலலிதாவால் போற்றி வளர்க்கப்பட்டு, பல்வேறு வரலாற்று சாதனைகளை படைத்த மாபெரும் மக்கள் பேரியக்கமான, அ.தி.மு.க.,வின், 54-ம் ஆண்டு தொடக்க விழா, இன்று தர்மபுரி மாவட்டத்தில் கொண்டாடப்பட உள்ளது.
இதில், தர்மபுரி கட்சி அலுவலகத்தில், இன்று காலை, 10:00 மணிக்கு தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்பட உள்ளது. அதை தொடர்ந்து, மாலை, 6:00 மணிக்கு தர்மபுரி பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன், பொதுக்கூட்டம் நடக்கவுள்ளது. இதில், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.