ADDED : அக் 16, 2025 01:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்தில், அரசு தொடக்க, நடுநிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு, வட்டார அளவிலான கலை திருவிழா போட்டிகள் வட்டார வளமைய அலுவலக வளாகத்தில் நடந்தது. வட்டார மேற்பார்வையாளர் எழிலரசி தலைமை வகித்தார். பி.இ.ஓ.,க்கள் வெங்கடாசலம், ஜெயகாந்தன் துவக்கி வைத்தனர்
.இதில் பேச்சுப்போட்டி, நாடகம், கிராமிய நடனம், பரத நாட்டியம், ரங்கோலி, வரைந்து வண்ணம் தீட்டுதல், களிமண் சிதை வேலைப்பாடு, வில்லுப்பாட்டு, டிரம்ஸ் முதலான போட்டிகள், மூன்று மையங்களில் நடந்தது.நடுவர்களாக கலைச்சுடர் மணி ராமு, சதீஷ், ரத்தினம் ஆகியோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை ஆசிரியர் பயிற்றுனர்கள், சிறப்பாசிரியர்கள் செய்திருந்தனர்.