ADDED : அக் 16, 2025 01:02 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பென்னாகரம்: பென்னாகரம் அடுத்த கருங்கல் மேடு கிராமத்தில், 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. பென்னாகரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
இதனால், கருங்கல் மேடு, நாகனுார் உள்ளிட்ட கிராமங்களுக்கு இடையே உள்ள நாகூர் ஏரி நிரம்பி கருங்கல் மேடு கிராமத்திற்கு செல்லக்கூடிய சாலையில், தண்ணீர் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதனால், இந்த கிராமத்திலிருந்து பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவியர் வேலைக்கு செல்ல கூடியவர்கள் கிராமத்தை விட்டு வெளியே செல்ல அவதிப்படுகின்றனர்.எனவே, மாவட்ட நிர்வாகம் முதுகம்பட்டி சாலையிலிருந்து, கருங்கல்மேட்டிற்கு தார்ச்சாலை அமைத்து, தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் பகுதியில் சிறிய பாலம் அமைத்துத்தர அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.