/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அ.ம.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
/
அ.ம.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
ADDED : நவ 20, 2025 01:36 AM
தர்மபுரி, தர்மபுரி மாவட்ட, அ.ம.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், மாவட்ட அவைத்தலைவர் முத்துசாமி தலைமையில் நேற்று தர்மபுரியில் நடந்தது. இதில், தர்மபுரி மாவட்டத்தில் கட்சி வளர்ச்சி பணிகள் மற்றும் தர்மபுரி மாவட்டத்திற்கு வருகை தரவுள்ள, அ.ம.மு.க., பொதுச் செயலாளருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில், தர்மபுரி மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், அமைப்பு செயலாளர் முருகன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு செயலாளர் பாலு ஆகியோர் பேசினர்.
இதில், மாவட்ட துணை செயலாளர்கள் கருணாகரன், சங்கீதா, மாவட்ட பொருளாளர் மணிமேகலன், தர்மபுரி நகர செயலாளர் பார்த்திபன் உட்பட நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

