ADDED : செப் 22, 2024 05:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அதியமான்கோட்டை: தர்மபுரி அடுத்த, நல்லசேனஹள்ளி பஞ்.,க்கு உட்பட்ட என்.எஸ்., ரெட்டியூரை சேர்ந்தவர் சின்னம்மாள், 72. இவர் அவருடைய விவசாய நிலத்திலுள்ள வீட்டில் வசித்து வந்தார்.
இதில், நேற்று முன்தினம் காலை முதல், அவரை காணவில்லை. அக்கம் பக்கம் தேடியபோது, மாலை, 4:00 மணிக்கு அவருடைய விவசாய கிணற்றில் சடலமாக கிடந்தார். தர்மபுரி தீயணைப்பு துறையினர் கிணற்றில் இருந்து, மூதாட்டி சடலத்தை மீட்டனர். அதியமான்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.