ADDED : ஜன 13, 2025 02:37 AM
ஓசூர்: ஓசூர், கோகுல் நகர் அருகே ரங்கோபண்டித அக்ரஹாரத்தில் உள்ள, ருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபால சுவாமி கோவிலில், வைகுண்ட ஏகாதசியை தொடர்ந்து, ஆண்டாள் திருக்கல்யாண உற்சவம் நேற்று நடந்தது.
ஆண்டாள் தவமிருந்து பெருமாளை அடைந்த நிகழ்வை நினைவு கூறும் வகையில், திருப்பாவை பாசுரங்கள் பாடி, சிறப்பு பூஜை நடந்தது. ஆண்டாள், பெருமானை அடைந்த புராணம் குறித்து, பக்தர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. ஓசூர் முல்லை நகர் காயத்-திரி குழு மூலம் கோலாட்டம் நடந்தது.தொடர்ந்து, வேஷ்டி, புடவை, பூ, பழங்கள், வளையல், மஞ்சள், குங்குமம், இனிப்பு உள்ளிட்ட சீர்வரிசைகளுடன், மாலை மாற்-றுதல், மாங்கல்ய சரடு அணிவித்தல் உள்ளிட்ட சடங்கு
களுடன், திருக்கல்யாண உற்சவம் வெகுவிமர்சையாக நடந்தது.
திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
அதேபோல், கோகுல் நகர் நந்தவனம் பகுதியிலுள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கடேஸ்வர சுவாமி கோவிலில், சீனிவாசா திருக்கல்யாண உற்சவம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.