sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 24, 2026 ,மாசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

தர்மபுரி

/

அண்ணாதுரை பிறந்த நாள் விழா

/

அண்ணாதுரை பிறந்த நாள் விழா

அண்ணாதுரை பிறந்த நாள் விழா

அண்ணாதுரை பிறந்த நாள் விழா


ADDED : செப் 19, 2024 07:16 AM

Google News

ADDED : செப் 19, 2024 07:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, போலுப்பள்ளி அறிஞர் அண்ணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், அண்ணாவின், 116வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. முன்னாள் மத்திய அமைச்சரும், முன்னாள் துணை சபாநாயகருமான தம்பிதுரை எம்.பி., விழாவை துவக்கி வைத்து பேசுகையில், ''மாணவ, மாணவியர் தமிழ் கலா-சாரத்தை பின்பற்ற வேண்டும்.

மூட நம்பிக்கைகளுக்கு முக்கியத்-துவம் கொடுக்கக்கூடாது. மற்றவர்களையும் மதித்து வாழ வேண்டும். தாய், தந்தையரை போற்றி பேணி பாதுகாக்க வேண்டும். தமிழ் கலாசாரம் மிகவும் தொன்மை வாய்ந்தது. கல்வி படிப்பதன் மூலம் அறிவையும், சுய மரியாதையையும் வளர்த்து கொண்டு, வாழ்வில்

முன்னேற்றம் காண வேண்டும். நுால்களை அதிகமாக வாசித்து பழக வேண்டும்,'' என்றார். தொடர்ந்து, அறிஞர் அண்ணா பிறந்த நாளையொட்டி, மாவட்ட அளவில் நடந்த பேச்சு, கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி,

கல்லுாரி மாணவ, மாணவியருக்கு சான்றிதழ்கள், கேடயங்-களை தம்பிதுரை எம்.பி., வழங்கினார். கல்லுாரி தாளாளர் கூத்த-ரசன்

பேசினார். கல்லுாரி முதல்வர் தனபால் வரவேற்றார்.சென்னை எம்.ஜி.ஆர்., நகர் நிலை பல்கலைக்கழக தமிழ் பேராசி-ரியர் அன்பு, அறிஞர் அண்ணாவின் பல்வேறு கொள்கைகள் குறித்து

எடுத்துரைத்தார். முன்னாள் எம்.எல்.ஏ., ராஜேந்திரன், முன்னாள் ஒன்றிய குழு தலைவர் ஜெயபால், முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு

துணை தலைவர் ரவிச்சந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us