தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ ஸ்ரீவெற்றி விகாஸ் கல்வி நிறுவனங்களில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு முகாம்

ஸ்ரீவெற்றி விகாஸ் கல்வி நிறுவனங்களில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு முகாம்

ஸ்ரீவெற்றி விகாஸ் கல்வி நிறுவனங்களில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு முகாம்


ADDED : செப் 28, 2026 01:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 28, 2026 01:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பாப்பிரெட்டிப்பட்டி: பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த மோளையானுார் ஸ்ரீவெற்றி விகாஸ் மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.சி., பள்ளியில் போதைப்பொருள் தடுப்பு, டெங்கு தடுப்பு மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி விழிப்புணர்வு முகாம் வட்டார மருத்துவ அலுவலர் கவுரிசங்கர் தலைமையில் நடந்தது. பள்ளியின் தலைவர் ராஜேந்-திரன், செயலர் டாக்டர் பழனிசாமி, தாளாளர் வைரமணி இயக்கு-னர்கள் கவுதமன், அசோக்குமார் மற்றும் மேலாளர் கனி முன்-னிலை வகித்தனர்.

மெட்ரிக் முதல்வர் கலைவாணி வரவேற்றார். இதில் டாக்டர் கவுரி சங்கர், பூதநத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் நவீன் ஆகியோர் பேசுகையில், 'டெங்கு காய்ச்சல் வர காரணமான ஏ.டி.எஸ்., ஏ.ஜி.பி.டி., கொசு உற்பத்தி-யாகும் இடங்களான தண்ணீர் தேங்கும் உபயோகமற்ற பொருட்-களில் கொசுப்புழு உற்பத்தியாகாமல் இருக்க நன்றாக மூடி வைக்-கவும். காய்ச்சல் வந்தால் அரசு மருத்துவமனை சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்' என்றனர்.

நிலவேம்பு கசாயம், பப்பாளி இலைச்சாறு, ஆகியவை நோய் எதிர்ப்பு திறனை அதிகரித்து, டெங்குவால் தட்டு அணுக்கள் குறைவதை கட்டுப்படுத்தி குணமாக்கும். கால்நடைகள் மற்றும் எலிகளில் இருக்கும் உன்னிகள் கடிப்பதால், கிரப் டைப்பஸ் காய்ச்சல் மனிதர்களுக்கு ஏற்படுகிறது. காய்ச்சல் உடல் வலி, தலைவலி, உடல் சோர்வு ஏற்பட்டால் மருத்துவமனை சென்று சிகிச்சை எடுத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டது. முன்னதாக மாணவர்கள் போதை தடுப்பு உறுதிமொழி எடுத்தனர். மாணவிய-ருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்ப-டுத்தப்பட்டது.

சி.பி.எஸ்.சி., முதல்வர் ராகவேந்திரன் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us