/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பரிசல் ஓட்டிகளுக்கு அடையாள அட்டை புதுப்பித்து கொள்ள விண்ணப்பம் வரவேற்பு
/
பரிசல் ஓட்டிகளுக்கு அடையாள அட்டை புதுப்பித்து கொள்ள விண்ணப்பம் வரவேற்பு
பரிசல் ஓட்டிகளுக்கு அடையாள அட்டை புதுப்பித்து கொள்ள விண்ணப்பம் வரவேற்பு
பரிசல் ஓட்டிகளுக்கு அடையாள அட்டை புதுப்பித்து கொள்ள விண்ணப்பம் வரவேற்பு
ADDED : மே 17, 2025 01:46 AM
பென்னாகரம், :ஒகேனக்கல்லில் உள்ள பரிசல் ஓட்டிகள், மசாஜ் தொழிலாளர்கள், சமையல் செய்யும் பெண்கள் என, அனைவரும் தங்களுடைய அடையாள அட்டைகளை புதுப்பித்து கொள்ள வேண்டும் என, பென்னாகரம் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஒகேனக்கல், தர்மபுரி மாவட்டத்தின் சிறந்த சுற்றுலா தலமாக உள்ளது. இங்கு வார மற்றும் கோடை விடுமுறைகளில், உள்ளூர் மட்டுமின்றி வெளியூர், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில், அங்குள்ள பரிசல் ஓட்டி
கள், மசாஜ் தொழிலாளர்கள், சமையல் செய்யும் பெண்கள் உள்ளிட்டோர் தங்களுடைய அடையாள அட்டையை புதுப்பிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக பென்னாகரம் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதன்படி வரும், 27ம் தேதி வரை தினமும் காலை, 10:00 மணி முதல் மாலை, 5:00 மணிக்குள் ஒகேனக்கல் சுற்றுலா தலத்தில் உள்ள மண்டல வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், அடையாள அட்டையை புதுப்பிக்க கொடுக்க வேண்டிய
ஆவணங்கள்.
பரிசல் ஓட்டிகள்
நீச்சல் சான்று, அரசு மருத்துவர் உடல்தகுதி சான்று, காவல்துறை சான்று, வனத்துறை சான்று, குடும்ப அட்டை நகல், ஆதார் நகல், போட்டோ 2, வீட்டுவரி ரசீது, குடிநீர் ரசீது, சுய சான்று.
மசாஜ் தொழிலாளர்கள்
உடல் நல மருத்துவர் பிசியோதெரபிஸ்ட் பயிற்சி சான்று, அரசு மருத்துவர் உடல்தகுதி சான்று, காவல்துறை சான்று, வனத்துறை சான்று, குடும்ப அட்டை நகல், ஆதார் நகல், போட்டோ 2, வீட்டுவரி ரசீது, குடிநீர் ரசீது, சுய சான்று.
சமையல் கலைஞர்கள்
உணவு பாதுகாப்பு துறை அலுவலர் சான்று, அரசு மருத்துவர் உடல்தகுதி சான்று, காவல்துறை சான்று, குடும்ப அட்டை நகல், ஆதார் நகல், போட்டோ 2, வீட்டுவரி ரசீது, குடிநீர் ரசீது, சுய சான்று.