/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
குறைந்த நீரில் நிறைந்த லாபம் பெற வேளாண் உதவி இயக்குனர் யோசனை
/
குறைந்த நீரில் நிறைந்த லாபம் பெற வேளாண் உதவி இயக்குனர் யோசனை
குறைந்த நீரில் நிறைந்த லாபம் பெற வேளாண் உதவி இயக்குனர் யோசனை
குறைந்த நீரில் நிறைந்த லாபம் பெற வேளாண் உதவி இயக்குனர் யோசனை
ADDED : மே 27, 2024 06:57 AM
பென்னாகரம் : விவசாயிகள் குறைந்த நீரில், நிறைந்த லாபம் பெறும் வழிமுறைகளை, பென்னாகரம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை:
நாட்டின் நீர் ஆதாரத்தில் பெரும் பகுதி, விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. பாரம்பரிய சாகுபடி முறையில் அதிக அளவு நீர் வீணாக்கப்படுகிறது. பாசன நீரை சிக்கனமாக பயன்படுத்தி பாசன பகுதிகளை அதிகரிக்க வேளாண் துறை மூலம், பிரதம மந்திரியின் விவசாய பாசன திட்டம் மற்றும் மத்திய, மாநில அரசு நிதி உதவியுடன், விவசாயிகளின் மேம்பாட்டிற்காக செயல்படுத்தப்படுகிறது.
சொட்டுநீர் பாசன முறையானது, பயிருக்கு தேவையான நீரை ஒரு மணிக்கு, 12 லிட்டரை விட குறைவாக விகிதத்தில் நீண்ட நேரம் மண்ணின் தன்மைக்கு ஏற்ப குழாய்களுடன் இணைக்கப்பட்ட சொட்டுவாண்கள் மூலம், பயிரின் வேர்பகுதிக்கு நேரடியாக நாள்தோறும் செலுத்தும் முறை. இதனால், 50 சதவீத நீரை சேமிக்கலாம்.
இந்த சொட்டுநீர் பாசனத்தால், பயிர் விளைச்சல், 20 முதல் 50 சதவீதம் உயர்கிறது. இத்திட்டத்திற்கு, 100 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. மானியத்தை பெற சிறு, குறு விவசாயிகளுக்கான சான்றுகளை தாசில்தாரிடம் பெற வேண்டும். அவரின், கையொப்பம் இட்ட சிட்டா பெற வேண்டும்.
தங்களது பெயரில் நில உரிமை வைத்திருக்க வேண்டும். மின் இணைப்பு வைத்திருக்க வேண்டும். நில வரைபடம், குடும்ப அட்டை நகல், புகைப்படம், மண் மற்றும் தண்ணீர் ஆய்வறிக்கை, ஆதார் அட்டை நகல், சிறு, குறு விவசாயிக்கான சான்று அளிக்க வேண்டும்.
பயிரின் இடைவெளிக்கு தகுந்தவாறு மானியம் வழங்கப்படுகிறது. விவசாய பயிர்களை பொறுத்த வரை கரும்பு, துவரை, மக்காச்சோளம், பருத்தி ஆகியவற்றிற்கு சொட்டு நீர் பாசனம் வழங்கப்படுகிறது. மேலும், விபரங்களுக்கு அந்தந்த பகுதி, உதவி வேளாண் அலுவர்களை அணுகலாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

