தீபாவளி பலகாரங்களில் அனுமதிக்காத நிறமூட்டிகளை தவிர்க்க அறிவுறுத்தல்
தீபாவளி பலகாரங்களில் அனுமதிக்காத நிறமூட்டிகளை தவிர்க்க அறிவுறுத்தல்
ADDED : நவ 04, 2026 06:02 AM
அரூர்:தர்மபுரி
மாவட்டம், அரூரில், தீபாவளி பண்டிகையையொட்டி, இனிப்பு, காரம்
தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு விழிப்புணர்வு
கூட்டம் நடந்தது.
அரூர் ஓட்டல் மற்றும் பேக்கரி உரிமையாளர்கள் சங்கம்
இணைந்து நடத்திய கூட்டத்திற்கு, மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன
அலுவலர் மருத்துவர் கைலாஷ் குமார் தலைமை வகித்தார். இதில், அரூர்,
பாப்பிரெட்டிப்பட்டி, மொரப்பூர், பொம்மிடி மற்றும் கடத்துாரை
சேர்ந்த இனிப்பு, காரம் தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள்
கலந்து கொண்டனர். கூட்டத்தில், தீபாவளியின் போது செய்யப்படும்
இனிப்பு, காரம் தயாரிப்பில் உணவு பாதுகாப்பு விதிகளை கட்டாயம்
பின்பற்ற வேண்டும். தீபாவளிக்கு அதிகளவில் பலகாரங்கள்
தயாரிக்கப்படும் என்பதால், தயாரிப்பாளர்கள் கட்டாயம் உணவு
பாதுகாப்பு உரிமம் பெற்றிருக்க வேண்டும். சமையல் கூடம், குடோன்,
விற்பனை இடங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். பலகாரங்களில்
அனுமதிக்கப்படாத நிறமூட்டிகள் சேர்க்கக்கூடாது. ஒருமுறை
பயன்படுத்திய எண்ணெய் மீண்டும் பயன்படுத்தக்கூடாது. தரச்சான்று
பெற்ற குடிநீரை தான் பயன்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட அறிவுரைகள்
வழங்கப்பட்டன. இதில், ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அரூர்
அருண், மொரப்பூர் திருப்பதி ஆகியோர் கலந்து கொண்டனர். அரூர் ஓட்டல்
மற்றும் பேக்கரி சங்கத்தலைவர் ஆசைத்தம்பி நன்றி கூறினார்.
