/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
'காவலன் செயலி' பயன்படுத்த மகளிர் போலீசார் விழிப்புணர்வு
/
'காவலன் செயலி' பயன்படுத்த மகளிர் போலீசார் விழிப்புணர்வு
'காவலன் செயலி' பயன்படுத்த மகளிர் போலீசார் விழிப்புணர்வு
'காவலன் செயலி' பயன்படுத்த மகளிர் போலீசார் விழிப்புணர்வு
ADDED : நவ 16, 2025 02:49 AM
தர்மபுரி: பெண்களின் பாதுகாப்புக்காக, மொபைலில் 'காவலன் செயலி' பயன்படுத்துவது குறித்து, மகளிர் போலீசார், தர்மபுரி டவுன் பஸ் ஸ்டாண்டில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கோவை மாவட்டத்தில் அண்மையில், கல்லுாரி மாணவி, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தின் எதிரொலியாக, தர்மபுரி மாவட்ட எஸ்.பி., மகேஷ்வரன் அறிவுறுத்தலின் படி, தர்-மபுரி மாவட்டத்தில், பள்ளி, கல்லுாரிகள் மற்றும் பஸ் ஸ்டாண்ட், பெண்கள் பணிபுரியும் நிறுவனங்கள் உட்பட பெண்கள் உள்ள இடங்களில், போலீசார் தீவிர பாதுகாப்பு மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், தர்மபுரி டவுன் பஸ் ஸ்டாண்டில், நேற்று தர்ம-புரி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ., மாசிலா மற்றும் செல்லம்மாள், சுதா உட்பட போலீசார், 'காவலன் செயலி' குறித்து, பள்ளி, கல்லுாரி மற்றும் பணிக்கு செல்லும் பெண்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.மேலும், 'காவலன் செயலி'யை பதிவிறக்கம் செய்து, பெண்கள் பயன்படுத்தும்போது, போலீஸ் ஸ்டேஷனில் உள்ள போலீசா-ருக்கு, 'அலர்ட்' வரும், உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று குற்றங்கள் தடுக்கப்படும். மொபைல்போனில் டேட்டா, நெட்ஒர்க் என எதுவும் இல்லை என்றாலும், இச்செயலி செயல்-படும். எனவே, பெண்கள் எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என, போலீசார் அறிவுறுத்தினர்.

